துளிரின் அபிஷேக்,லோஷாந்த்,வேணு ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டி நடைபெறுகிறது!

கல்முனை துளிர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் தமது கழக உறுபப்பினர்களான  காலம்சென்று அபிஷேக்,லோஷாந்த்,வேணு ஆகியோரின் ஞாபகார்த்தமாக  மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அணிக்குப் 11 பேர் 10.ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி AVL trophy 2018 உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டிகள் 25 ,30,31 01,07,08,13 ஆகிய திகதிகளில் தொடர்ந்து   நடைபெறும்  இதில் 32 கழகங்கள் பங்கு பற்றுகின்றன.

 

By admin