இன்று  முதல் அமர்வு: ஆனால் யார் தவிசாளர் யார் உபதவிசாளர் ?
இன்னும் தீர்மானமில்லை: அரசியற்கட்சிகள் சுயேச்சைகள் கயிறிழுப்பு!
(காரைதீவு  நிருபர் சகா)


காரைதீவு பிரதேசசபையின் முதல் அமர்வு  இன்று   (27) நடைபெறவிருக்கின்ற இந்த

வேளையில் தவிசாளர் யார் உப தவிசாளர் யார் என்று இன்னும் தீர்மானமாகாதநிலை
நிலவுகின்றது.
போட்டியிட்ட அரசியல்கட்சிகளும் சுயேச்சை அணியினரும் தேர்தல் காலத்தில்
மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் தேசியம் மண் பற்றுறுதி
என்பவற்றையெல்லாம் மறந்து பதவிக்காக  கயிறிழுத்தலை நடாத்துகின்றன.
அரசியல் தலைமைகளும் இறுதிக்கட்டம்வரை இச்சிக்கலை
இழுத்தடித்துவந்திருக்கின்றன. இந்தச்செய்தி எழுதும் வரை தீர்க்கமான
முடிவு எட்டப்படவில்லை.
ஒரு கட்சிக்குள் இத்தவிசாளர் பதவிக்காக இருவரிடையே பலத்த இழுபறிநிலவுவதாக
தெரிகிறது.இப்போட்டியால் யாருடனும் கூட்டமைக்க அவர்கள் திரைமறைவில்
தயாராகிவருவதாகத்தெரிகிறது.

பெரும்பான்மையினக்கட்சிகளோடு த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைக்காது என்று ரெலோ
தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கல்முனைக்புகுவந்திருந்தவேளை
உறுதியாககூறியிருந்தமையும் குறிர்ரிடத்தக்கது.

இதனிடையே காரைதீவு பிரதேசசபையின் ஆட்சியமைப்பது தொடர்பாக முதற்கட்டமாக
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் சுயேச்சை அணியிருக்கும் இடையே
சந்திப்பொன்று மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.
அடுத்தசந்திப்பு இன்று  இடம்பெறலாமென அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த
இருஅணியினரும் மேலுமோரு அணியுமிணைந்து ஆட்சியமைக்கவுள்தாகத்
தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இன்னும் அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

மொத்த 12972வாக்குகளில் 10821வாக்குகள் அளிக்கப்பட்டன. அதில் 106
வாக்குகள் நிராகரிக்கப்பட்டதனால் 10715வாக்குகள் செல்லுபடியானது.அதனால்
வெட்டுப்புள்ளி 974 ஆகும். அதன்படி  த.அ.கட்சி 4ஆசனங்களையும்
சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசங்ம ஸ்ரீல.சு.கட்சி
2ஆசனத்தையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும்
பெற்றுக்கொண்டது. இங்கு 12உறுப்பினர் ததெரிவானார்கள். ஏனெனில் மேலதிகமாக
வந்த 1 ஆசனம் தொங்கு உறுப்பினர்; என்பது குறிப்பிடத்தக்கது.

By admin