இலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு!

(தணிகசீலன்)

தமிழில் இலங்கைத் சினிமாத்துறை பெரிதாக வளர்சி பெறவில்லை காரணம் இந்திய சினிமாக்களின் செல்வாக்கு மற்றும் அதனுடன் போட்டிபோட முடியாத நிலை. ஆதனால் ஒரு சில கலைப்படைப்புகள் மாத்திரம் வெளிவந்துகொண்டிருந்தாலும் அவை கோலோச்சவில்லை, பிரகாசிக்கவில்லை. அந்த நிலையில் வெறும் ஐந்து திரைப்படங்களே கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் தமிழில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட்ட விரிவுரையாளராகவும் இருக்கும் கலாநிதி. கு.இராஜேந்திரன் குறிப்பிடுகையில் ‘இந்த 30 ஆண்டுகளில் ஆறாவது திரைப்படமாகவும் இதுவரை காலழும் இலங்கையின் 45 ஆவது தமிழ் திரைப்படமாகவும் ‘சத்தியயுகம்’ இலங்கையில், கிழக்கில் மட்டக்களப்பு தேத்தாத்தீவில் கிட்டத்தட்ட 193 கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு விஞ்ஞான மெஞ்ஞான கருத்துக்கள் கலந்த திரைக்காவியமாக படைக்கப்பட்டுள்ளமை அனைவராலும் வரவேற்க்கப்பட்டமை பற்றி வியந்து குறிப்பிட்டார்’

இத்திரைப்பட இயக்கம், எழுத்து, தயாரிப்பு என இப்பெரிய பணியினை ஆசிரியர் .அழகரெட்டினம். ஈழவேந்தன் அவர்கள் செம்மைப்படுத்த, இதன் படவாக்கத்தினை த.கவிதரனும், இசை ஒருங்கமைப்பினை சி.ஜீவநாத் அவர்களும் நெறிப்படுத்தி இருந்தனர். இந்தப்படத்தில் வருகின்ற பாடலை கவிஞரும், எழுத்தாளருமாகிய சிவகுரு.தணிகசீலன் (உதவிப்பணிப்பாளர்) எழுத அதனை பாடியுள்ளார் விதுஷன் அவர்கள்.

இந்த திரைப்பட வெளியீட்டு நிகழ்வு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய கலை மண்டபத்தினில் 24.03.2018 ஆம் திகதி பி.ப 2.00 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பல பிரமுகர்களும் கௌரவ சிறப்பு அதிதிகளும் அழைப்பு அதிதிகளும் இவர்களுடன் கலைஞர்கள், சங்கங்கள் கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்கு கொம்புச்சந்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.விமலாநந்தராசா தலைமைதாங்க அதிதிகள் வரவேற்க்கப்பட்டு, மங்கல விளக்கேற்றி இறைவணக்கத்துடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் வரவேற்புரையை கவிஞ்ஞர் தேனூரான் நிகழ்த்த ஆசியுரையினை கொம்புச்சந்தி ஆலய பிரதம குரு அவர்கள் வழகி வைத்தார். அதைத்தொடந்து வந்த நிகழ்வில் திரைப்பட இறுவட்டு அதிதிகளுக்கு இயக்குனரின் தாயாரான திருமதி.அழகரெத்தினம் தவமணிதேவி அவர்களால் வைபவரீதியாக வளங்கிவைக்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கு அதிதிகள் வழங்கி வைத்தமை சிறப்பு.

ஆதிதிகள் வரிசையில் கலாநிதி .சி.அமலநாதன், பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, கலாநிதி மு.கோபாலரெட்ணம் மேலதிகப் பணிப்பாளர் நாயகம், நிதி அமைச்சு, திரு .சி .மனோகரன் பிரதிக்கல்வி பணிப்பாளர் மாகாணக்ல்வித் தினைக்களம், வைத்திய அத்தியட்ஷகர் கு.சுகுணன், ஆதார வைத்தியசாலை களுவாஞ்சிக்குடி ஆகியோருடன் இன்னும் பல அதிதிகள் கலந்து இந்த நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

தலைவர் தனது உரையில் எமது ஊர் ‘கலையூர்’ என அழைக்கப்படுவதற்கேற்ப்ப பல கலைஞர்கள் தொன்றுதொட்டு இந்த மாவட்டத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர். 1960 களில் இருந்து தேவா கலைக்கழகம், பாரதி கலைக்கழகம் என்பனவற்றுடன் தொடங்கி கலாலயா கலைக்கழகம், வாணி கலைக்கழகம் மற்றும் தேனுக கலைக்கழகம் ஈறாக தேசிய அளவில் பல பாராட்னையும் பரிசிகளையும் கலை நிகழ்வுகளினூடாக தட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த முழு நீளத்திரைப்படமும் அந்தப் பேரினை எடுக்கும் என்பதற்கு ஐயமில்லை. அத்தனை கலைஞர்களும் அசத்தி இருக்கின்றனர் என அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் கலாநிதி.சி.அமலநாதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘இந்தியப் திரைப்படத்துக்கு ஒப்பான முறையில் மிகக் அரிதான வளங்களைக் கொண்டு பெரிய பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டமை உண்மையில் வரவேற்க்கத்தக்கது எனவும் இந்த கலைஞர்கள் அத்தனைபேரும் பாராட்டப்படவேண்டியவர்கள’; எனவும் எடுத்துரைத்தார். அதுபோன்று ஏனைய அதிதிகளும் இந்த முயற்சினை வெகுவாகப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

By admin