இன்று காரைதீவுபிரதேசபையின்  மூன்றாவது சபையின் முதலாவதுஅமர்வு!

காரைதீவு பிரதேசசபைக்காக நடைபெற்ற 3வது உள்ளுராட்சிசபைத்தேர்தலில்
வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான  முதலாவது அமர்வு இன்று (27)
செவ்வாயக்கிழமை காலை 11.30மணியளவில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்
நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் தவிசாளர் யார்? உபதவிசாளர் யார்? என்ற
தெரிவும் இடம்பெறவிருக்கிறது.
காரைதீவில் அவதரித்த உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன்
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது ஜனனதினத்தில் இந்த 3வது சபை
அமர்வுகூடுவது பொருத்தமாகவுள்ளது.

கடந்த இருசபைகளிலும் இலங்கைத்தமிழரசுக்கட்சி ஆட்யமைத்திருந்தபோதிலும்
இம்முறை இங்கு எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறாத
காரணத்தினால் கூட்டாட்சி அமைக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான
வியூகங்களை கட்சிகளும் சுயேச்சைகளும் கடந்த ஒருவாரகாலமாக ஈடுபட்டிருந்தன.
இருந்தபோதிலும் இன்னும் தவிசாளர் யார் உபதவிசாளர் யார் என்பது தீர்க்கமாக
வெளிவரவில்லை.

நடைபெற்ற தேர்தலில் இலங்கைத்தமிழரசுக்கட்சி 3202 வாக்குகளையும்
சுயேச்சை-1 அணி 1985வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
1684வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1522வாக்குகளையும்
அ.இ.ம.கா -1010 வாக்குகளையும் சுயேச்சை -2 அணி 829வாக்குகளையும்
தமிழர்விடுதலைக்கூட்டணி 280வாக்குகளையும் ஜ.தே.கட்சி 203வாக்குகளையும்
பெற்றுக்கொண்டன.

அதன்படி  த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும்
ஸ்ரீல.மு.கா. 2ஆசங்ம ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனத்தையும் அ.இ.ம.காங்கிரஸ்
1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

இவ்வாறே 11 அங்கத்தவர்களும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.ஆனால் த.அ.கட்சி

வட்டாரங்கள் நான்கை வென்றதனால் அவர்களிடம் இருந்து ஒரு உறுப்பினரை கழிக்க
முடியாது ஆனால் ஏனைய கட்சிக்கு வழங்கவேண்டியதையும் குறைக்க முடியாது
இதனால் ஒரு உறுப்பினர் அதிகரித்துள்ளது. அது தொங்குஉறுப்பினரென்பதை
அறிவோம். அதன்படி காரைதீவு பிரதேசசபைக்கு 12ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தமிழரசுக்கட்சியின்  செல்வாக்கு ?

காரைதீவுப்பிரதேசசபைக்கான 3வது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின்படி
இ.த.அரசுக்கட்சி 4 வட்டாரங்களில் வெற்றிபெற்றபோதிலும் பெற்றவாக்குகளில்
சரிவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

ஒரு  பகுப்பாய்வு!

காரைதீவைப்பொறுத்தவரை இலங்கைத்தமிழரசுக்கட்சி 2006இல் 6059வாக்குகளையும்
2011இல் 4284வாக்குகளையும் பெற்று தலா 4 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
ஆனால் இம்முறை  ஆக 3202 வாக்குகiள மாத்திரமே  பெற்று அதே 4
உறுப்பினர்களைப்பெற்றுள்ளது. ஆனால் முறைப்படி பெற்ற
வhக்குகளினடிப்படையில் இக்கட்சிக்கு  3உறுப்பினர்களே உரித்து. எனவேதான்
தொங்கு உறுப்பினர் காரைதீவுக்குகிடைத்தது. எனவே
இ.த.அரசுகட்சியைப்பொறுத்தவரை பின்னடைவே என்பதை சுட்டிக்காட்டமுடியும்.

இதுவரை!

கன்னித் தேர்தலில்…

2006இல் காரைதீவு பிரதேசசபைக்காக விகிதாசாரபிரதிநிதித்துவ அடிப்படையில்
நடைபெற்ற கன்னி உள்ளுராட்சிமன்றத் தேர்தலில்  05 உறுப்பினர்கள்
தெரிவுசெய்யப்பட்டனர்.
அப்போது காரைதீவு பிரதேசத்தில்  10848வாக்காளர்கள் இருந்தனர். அவர்களுள்
9036பேர் வாக்களித்தனர். அதாவது 83.2வீதமானோர் வாக்களித்தனர்.

அத்தேர்தலில் இலங்கைத்தமிழரசுக்கட்சி 6059 வாக்குகளைப்பெற்று 4ஆசனங்களைக்
கைப்பற்றியது. 2239வாக்குகளைப்பெற்ற மு.கா. அடங்கலான ஜ.தே.கட்சி
2239வாக்குகளைப்பெற்று 1ஆசனத்தைப் பெற்றது.

இலங்கைத்தமிழரசுக்கட்சிசார்பில் என்.ஜீவராசா 4859வாக்குகளும்
வி.கிருஸ்ணமூர்த்தி 4522வாக்குகளும் எஸ்.சிறிநவநாதன் 3188வாக்ளைகுகளையும்
எஸ்.பகீரதன் 2307வாக்குகளும் பெற்று உறுப்பினரானார்கள். என்.ஜீவராசா
தவிசாளராகவும் வி.கிருஸ்ணமூர்த்தி உபதவிசாளராகவும் தெரிவானார்கள்.
ஜ.தே.கட்சி சார்பில் எம்.ஜ.இஸ்மாயில் தெரிவானார்.

இரண்டாவது தேர்தலில்..
பின்பு 2011இல் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் காரைதீவு
பிரதேசசபையின் 5ஆசனங்கள் விகிதாசாரபிரதிநிதித்துவ அடிப்படையில்
தெரிவுசெய்யப்பட்டன.

அப்போது காரைதீவு பிரதேசத்தில்  11790வாக்காளர்கள் இருந்தனர். அவர்களுள்
8327பேர் வாக்களித்தனர். அதாவது 70.62வீதமானோர் வாக்களித்தனர்.

அத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 4284 வாக்குகளைப்பெற்று
4ஆசனங்களைக் கைப்பற்றியது. 2239வாக்குகளைப்பெற்ற மு.கா.கட்சி
2364வாக்குகளைப்பெற்று 1ஆசனத்தைப் பெற்றது.

த.தே.கூட்டமைப்பு சார்பில்  செ.இராசையா 2948வாக்குகளும்
கே.தட்சணாமூர்த்தி 2137வாக்குகளும் கே.பாஸ்கரன்  1739வாக்குகளையும்
வை.கோபிகாந்த் 1693வாக்குகளும் பெற்று உறுப்பினரானார்கள். செ.இராசையா
தவிசாளராகவும் கே.தட்சணாமூர்த்தி உபதவிசாளராகவும் தெரிவானார்கள்.
மு.கா.கட்சி சார்பில் எ.பாயிஸ் தெரிவானார்.
பின்பு 2வருடகாலத்துள் 2013இல் பாதீடு இருதடவைகள்
தோற்கடிக்கப்பட்டகாரணத்தினால் தவிசாளர் செ.இராசையா தோற்கடிக்கப்பட்டு
உறுப்பினரான வை.கோபிகாந்த் 2014இல் தவிசாளராக கட்சியினால்
நியமிக்கப்பட்டார்.

அதன்பின்பு சுமார் இரண்டரை வருடங்கள் தேர்தலின்றி வெறுமனே செயலாளர்
நிருவாகத்தில் இயங்கி கடந்த 10.02.2018இல் 3வது தேர்தல் நடைபெற்றது.

இம்முறை மூன்றாவது தேர்தலில்..

புதிதாக அறிமுகம்செய்யப்பட்ட கலப்புமுறைத்தேர்தலில்
காரைதீவுப்பிரதேசசபைக்கு 11ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன.அதன்படி இம்முறை
11ஆசனங்களைக்கொண்ட காரைதீவுப்பிரதேசசபைக்காக கடந்த 10.02.2018இல் 3வது
தேர்தல் நடைபெற்றது.  6கட்சிகளும் 2சுயேச்சைக்குழுக்களும் போட்டியிட்டன.

மொத்த 12972வாக்குகளில் 10821வாக்குகள் அளிக்கப்பட்டன. அதில் 106
வாக்குகள் நிராகரிக்கப்பட்டதனால் 10715வாக்குகள் செல்லுபடியானது.அதனால்
வெட்டுப்புள்ளி 974 ஆகும். அதன்படி  த.அ.கட்சி 4ஆசனங்களையும்
சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசங்ம ஸ்ரீல.சு.கட்சி
2ஆசனத்தையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும்
பெற்றுக்கொண்டது. இங்கு 12உறுப்பினர்கள்தெரிவானார்கள். ஏனெனில் மேலதிகமாக
வந்த 1 ஆசனம் தொங்கு உறுப்பினர்; என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டாரமுறையில் த.அ.கட்சி சார்பில் ச.நேசராசா த.மோகனதாஸ் சி.ஜெயராணி
கி.ஜெயசிறில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக முஸ்தபா ஜலீல் ஸ்ரீல.சு.கட்சி
சார்பில் ஏ.எம்.ஜாகீர் சுயேச்சை-2 அணி சார்பில் ஏ.ஆர்.எம். பஸ்மிர்
ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

விகிதாசாரமுறையில் தெரிவுசெய்யப்படுபவர்களின் பெயர்கள் அந்தந்த
கட்சியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டபின்னர் கடந்த 9ஆம்
திகதிய வர்த்தமானியில் வெளியாகியது.

அதன்படி சுயேச்சை அணி1 சார்பில் ஆ.பூபாலரெத்தினம் இரா.மோகன்  ஸ்ரீல.
சு.கட்சி சார்பில் மு.காண்டீபன் ஸ்ரீல.மு.கா.சார்பில்
எம்.எச்.எம்.இஸ்மாயில் எம்.என்.எம்.றனீஸ் ஆகியோரின் பெயர்கள் கடந்த 9ஆம்
திகதிய வர்த்தமானியில் பதிவாகியுள்ளன.
மேலும் புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சுயேச்சை அணி1 என்பன
தலா இரண்டு உறுப்பினர்களைப்பெற்றதுடன் அ.இ.ம.காங்கிரசும் சுயேச்சைஅணி
2உம் தலா 1ஆசனத்தைப் பெற்றுள்ளன. அதாவது வழமையாக இருந்துவந்த இ.த.அ.கட்சி
மு.கா என்பவற்றுக்கு   மேலதிகமாக சபையில் சேர்ந்துள்ளன.

சுயேச்சையின் பிரவேசம்!

காரைதீவு வரலாற்றில் முதற்றடவையாக சுயேச்சை அணியொன்றின் பிரவேசம் இம்முறை
இடம்பெற்றுள்ளது.
இம்முறை களநிலைவரத்தை கருத்தில்கொண்டு  ஊர்பொதுமக்களின்
பொதுக்கூட்டமொன்று கூட்டப்பட்டு அதில் ஊரை வழிநடாத்தவென மகாசபை எனும்
பெயரில் சபையொன்று தெரிவாகியது.
அச்சபையின் வழிநடத்தலில் சுயேச்சைஅணியொன்று ஏகோபித்த முறையில் இறக்கப்பட
இருந்தபோது கட்சியொன்றின் போக்கினால் கட்சிகள் பலவும் களத்திலிறங்கின.
எனினும் சுயேச்சைஅணி களமிறக்கப்பட்ட தேர்தல்வரையான 2மாதகாலத்துள் சுமார்
2000வாக்குகள்(1985) பெற்றமை ஒரு சாதனையாகக்கருதப்படுகின்றது.
50வருடங்களைக்கடந்த தமிழரசுக்கட்சி ஸ்ரீல.சு.கட்சி போன்ற பழம்பெரும்
கட்சிகள் இருக்கத்தக்கதாக 2மாதகாலத்துள் 2000வாக்குகளைப்பெற்று
2ஆசனங்களைப்பெற்றது. மக்களிடையேயுள்ள செல்வாக்கை அது
எடுத்துக்காட்டுகிறது.

காரைதீவு சுயேச்சைக்குழு தமது வேட்பாளர்களுள் விரும்பிய எட்டுப்பேருக்கு
தமக்குக்கிடைத்த இரண்டு ஆசனங்களையும் சுழற்சிமுறையில்
பகிர்ந்தளித்துள்ளது . நேற்றுமுன்தினம் பொதுமக்கள் முன்னிலையில்
விபுலானந்த மணி மண்டபத்தில் சுயேச்சைக்குழுத்தலைவர்சந்திரசேகரம்
நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக அந்த
எட்டுப்பேரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.

அதன்படி முதல்வருடத்தில் ஆ.பூபாலரெத்தினம் மற்றும் இ.மோகன் இரண்டாம்
வருடத்தில் மு.மதிவதனி  மற்றும் சி.தேவப்பிரியன் மூன்றாம் வருடத்தில்
கே.குமாரசிறி மற்றும் எஸ்.சசிக்குமார் நான்காம் வருடத்தில்
என்.ஜெயகாந்தன் மற்றும் வை.சத்தியமாறன் ஆகியோருக்கு இரண்டு உறுப்பினர்
பதவிகளும் வழங்கப்பட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு
சத்தியப்பிரமாணம்எடுக்கப்பட்டு நிபந்தனை உடன்படிக்கையும்
கைச்சாத்திடப்பட்டு பகிரங்கமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இது பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. பதவிகளுக்கு அடிபிடி
இடம்பெறுகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான விட்டுக்கொடுப்புகள்
மற்றயவருக்கு பதவியை சுழற்சிமுறையில் வழங்குவதென்பது பதவிகளுக்கு
ஆசைப்படாத ஆனால் சேவைசெய்யத்துடிக்கின்ற விருப்பினை எடுத்துக்காட்டி
நிற்கின்றதென  மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

தேர்தலுக்கு முன்பு மகாசபை கூட்டியகூட்டத்தில் காரைதீவு தமிழ்மக்களின்
இருப்பு மானம் காப்பாற்றும்வகையில் செயற்படுவதென்றும்
தமக்குக்கிடைக்கின்ற ஆசனங்களை தம்மிடையே சுழற்சிமுறையில் அனைவரும்
பகிர்ந்து சபையை அலங்கரிப்பது என்று  மேடைகளில்
வாக்குறுதியளித்திருந்தார்கள்.. அதன்படி அவர்கள் அதனை
நிறைவேற்றியுள்ளனர்.
பெண் பிரதிநிதியை வழங்குவது யார்?

காரைதீவுப் பிரதேசசபையைஅமைப்பதில் சிக்கல் நிலை எழுந்திருந்தது. அங்கு
பெண்பிரதிநிதித்துவம் 25வீதம் இல்லாத நிலை. இதனால் அங்கு சபையை உரிய
திகதியில் ஆரம்பிக்கமுடியாமல் போய்விடுமோ என்று காரைதீவு மக்கள்
அஞ்சுகினார்கள். எனினும் ஒருவாறாக முதல்அமர்வு நாளை அரங்கேறவுள்ளது.

காரைதீவுப் பிரதேசசபைக்கு வர்த்தமானி அறிவித்தலின்படி நிர்ணயிக்கப்பட்ட
பெண்பிரதிநிதித்துவங்களின் எண்ணக்கை 2 ஆகும். அவற்றில் ஒரு பிரதிநிதி
ஏலவே வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்டுவிட்டது. த.தே.கூட்டமைப்பில் 6ஆம்
வட்டாரத்தில் போட்டியிட்ட திருமதி கே.ஜெயராணி தெரிவாகியுள்ளார்.
எனவே  இரண்டாவது பெண்மணி விகிதாசாரரீதியில் வழங்கவேண்டும். ஆனால் அதனை
வழங்குவது யார் என்ற சட்டப்பிரச்சினை எழுந்துள்ளது?

தேர்தல் சட்டவிதிமுறையின்படி தேர்தலில் 20வீதத்திற்கு கூடுதலான
வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சியிடம் அல்லது
சுயேச்சையிடம் மட்டும்தான் பெண் ஆசனங்களைக்  கோரமுடியும் என்றுள்ளது.

இந்தச்சட்டத்தின்படி காரைதீவுப்பிரதேசசபைத்தேர்தல் பெறுபேற்றின்படி  ஆக
த.அ.கட்சி மட்டுமே 3ஆசனங்களுக்கு மேல் பெற்றுள்ளது. 20வீதத்திற்கும்
கூடுதலான 3202(29.8)வாக்குகளைப்பெற்றுள்ளது.ஏனைய 7 அணிகளும்
20வீதத்திற்குக் குறைவான வாக்குகளையும் 3ஆசனங்களுக்கும் குறைவான
ஆசனங்களையுமே பெற்றுள்ளது. அதன்படி யாரிடமிருந்து இந்த ஒரு பெண்
ஆசனத்தைப் பெறுவது? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது சட்டச்சிக்கல்.

கணிப்புப்பொறிமுறை!

சரி  20மூ க்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும்
பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான
வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும் என்று பார்த்தால்

செல்லுபடியான வாக்குகள் 10715  -.(1985 1964 1522  1010  829  280 203 )
—   7793 வரும்  2922

இந்த 2992ஜ  பெண்ஆசனங்களின் எண்ணிக்கையான 2 ஆல் வகுத்தால் 1461 வரும்.

இந்தத்தொகையைவைத்து பெண் ஆசனம் பெறமுயற்சித்தால் 4 கட்சிகள்
இந்தத்தொகையைப் பெற்றிருந்தாலும்; இந்தப் பெண் ஆசனத்தை யாரிடமிருந்து
பெறுவது? எப்படி 25வீதமாக்குவது?

இதுவே இன்றுள்ள பிரச்சினையும் சிக்கலும். யாராவது வழக்குத்தாக்கல்
செய்யின் சபையின் எதிர்காலம்கேள்விக்குறியாகும்.

இன்று முதல் அமர்வு!

எனவே  நாளை(27) செவ்வாய்க்கிழமை காலை 11.30மணிக்கு கிழக்கு மாகாண
உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெறவிருக்கும்
முதலாவது அமர்வில் இப்புதிய 12உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளதோடு
தவிசாளர் உபதவிசாளரும் தெரிவாகவுள்ளனர்.

சபைச்செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நாளைய அமர்விற்கான
ஏற்பாடுகளைச்செய்துவருகிறார்.யார் தவிசாளர் யார் உப தவிசாளர் என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்.

வி.ரி.சகாதேவராஜா காரைதீவு  நிருபர்

By admin