பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக உணரபட்டது

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-வீடியோ ரபவுல்: பப்புவா நியூகினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். பப்புவா நியூகினியாவில் கடந்த 10 நாட்களகாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ரபவுல் நகரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் உடனடியாக விடுக்கப்படவில்லை. பப்புவா நியூகினியாவில் தொடரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.