அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் பற்றி சீனத் துணை வணிக அமைச்சர் பதில்….

சீன வளர்ச்சி மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக்கான கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. சீனத் துணை வணிக அமைச்சரும் சர்தேச வர்த்தகப் பேச்சுவார்த்தையின் துணை பிரதிநிதியுமான வாங் ஷோவ்வேன் இதில் பங்கேற்று பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில், உலகம் புதிய அறைகூவல்கள் பலவற்றை எதிர்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு வளர்ச்சி தொடர்ந்து விரிவடைந்துள்ளது என்றார்.

சீன-அமெரிக்க வர்த்தக மோதல் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக பேரரசுகளாகும். இரு தரப்புக்குமிடையே மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இரு நாடுகளும் தங்களின் கருத்து வேற்றுமைகளை உலக வர்த்தக அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் தீர்க்க வேண்டுமென விரும்புவதாக வாங் ஷோவ்வேன் தெரிவித்தார்.