வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டின் எதிரொலி . 6 லட்சம் கோடியை இழந்து நிற்கும் பேஸ்புக் நிறுவனம்…

சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி  அதிர்வுகளை ஏற்படுத்திய   பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் ரூ.6 லட்சம் கோடியை இழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இது இன்னும் அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.
அனலிட்டிகா என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் நிறுவனம் அமெரிக்கா அதிபர் தேர்தலில்
பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததே ஃபேஸ்புக் பங்குகள் வீழ்ச்சியடைய காரணமாக இருந்தது.
இதே நிறுவனம் இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து எதிர்வரும் 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக பாஜக தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் இருந்து தகவல் வெளி வந்தது உண்மை தான் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஒப்புக் கொண்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் சமூக வலைதளத்தில் . பலரும் பேஸ்புக் அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் இருந்து நீக்கினார்கள். இதனால் மார்க் ஜூக்கர்பெர்கின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற  நிறுவனம் பேஸ்புக் குறித்து  ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது. நாம் பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்தாலும் கூட நாம் பயன்படுத்தும் இணையதளங்களின் விவரங்களை பேஸ்புக் வேவு பார்க்க முடியும் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.