கல்முனை மாநகர் திரு இருதயநாதர் தேவாலயத்தில் பாஸ்க்கா நாடக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

(சிந்துஜன்)

கல்முனை மாநகரிலுள்ள திரு இருதயநாதர் தேவாலயத்தில் நேற்று மாலை (25) ஜேசுநாதரின் வரலாறு கூறும் பாஸ்க்கா நாடகம் தாகமாயிருக்கிறேன் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை பங்குத் தந்தை ஏ.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து அருட்தந்தைகள், அருட்சகோதரர்கள், அருட் சகோதரிகள் பொது மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.  இந் நிகழ்வு 30 வருடங்களின் பின்பு கல்முனை தேவாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற மதங்களை கடந்து ஏனைய மதத்தினரும் பங்களிப்பு செய்திருந்தார்கள்.

By admin