வெள்ளி விழாகாணும் எவரெடியின் சித்திரை கொண்டாட்டம்!

வெள்ளி விழா காணும் கல்முனை  எவரெடி கழகத்தின்  வெற்றித்திருவிழாவும், சித்திரை கொண்டாட்டமும்    சித்திரை புத்தாண்டை முன்னிட்டும் எவரெடியின் 25ம் வருட பூர்த்தியையும் கொண்டாடுமுகமாக கல்முனை மாநகரில்  சித்திரை மாதம் 28,29,30 திகதிகளில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.

28ம் திகதி மரதன் ஓட்டப்போட்டியும் மைதான நிகழ்வுகளும்,   29ம் கார்னிவேல் மற்றும் களியாட்ட நிகழ்வுகளும்,         30ம் திகதி சைக்கிள் ஓட்டப்போட்டியும், மாலை பரிசளிப்பு நிகழ்வும், பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

அனைவரும் வெள்ளிவிழாக் காணும் எவரெடியின் வெற்றி திருவிழாவின் சித்திரை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எவரெடி கழகத்தினர் அழைக்கின்றனர்.

-நிதான்-

By admin