அரசியல் கைதி ஆனந்தசுதாகரக்கு  பொது மன்னிப்பு வழங்கக் கோரி கல்முனையில்  தமிழ் இளைஞர்கள்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  கையெழுத்து சேகரிப்பு! (video)

ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு  அவரது பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொது மன்னிப்பு வழங்கும் கோரிக்கையை முன்வைத்து  தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் கையெழுத்துக்களை சேகரித்து ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பும் நடவடிக்கை இன்று(24) முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை அம்பலத்தடி ஆலய முன்றலில் சர்வ மத தலைவர்களின் முன்னிலையில் இன்று காலை ஒன்பது மணிக்கு  ஆரம்பமானது இதில் கல்முனை பிரதேச இளைஞர்கள்  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு  கையொப்பமிட்டனர்.

இன்று மாலை 5 மணிவரை வரை  கையெழுத்து சேகரிப்பு   நடைபெற்று  நாளை ஞாயிற்றுக்கிழமை இதன் தொடர்ச்சி காரைதீவு இளைஞர்களாலும்  நாளை மறுதினம் திங்கட்கிழமை  அக்கரைப்பற்ளில் அக்கரைப்பற்று இளைஞர்களாலலும்  மறுநாள் செவ்வாய்கிழமை திருக்கோவிலிலும் இளைஞர்களால் கையெழுத்து சேகரிப்பு முன்னெடுக்கப்பட்டு  சேகரிக்கும் அனைத்து கையெழுத்துக்களும் ஒன்றிணைக்கப்பட்டு கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு  மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்கோரும் பொதுமக்களின் கோரிக்கை மகஜர்  அனுப்பி வைக்கப்டவுள்ளது.

    

By admin