அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில்   கையெழுத்து வேட்டை!

டினேஸ்

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் பொது மக்கள்  சிவில் அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கையெழுத்து வேட்டை நேற்று (23)   மட்டு நகர் காந்தி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்றது.பெரும்திரளான மக்கள் கலந்து கையொப்பம் இட்டனர் இன்றும்.  இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைகள் முன்வைத்து வரும் நிலையில், ஆனந்தசுதாகரனின் மகள், ஆ.சங்கீதா தனது அப்பாவை விடுவிக்க உங்களது அப்பாவுக்கு சொல்லுங்கள் என மைத்திரியின் மகள் சத்துரிக்காவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது மட்டக்களப்பு வாழ் பொது மக்கள், இளைஞர்கள்,  வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களையிட்டு அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

By admin