ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரின் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் ஜனாதிபதிக்கு மு.இராஜேஸ்வரன் கடிதம்

தாயின் அரவணைப்பில் தந்தையை பிரிந்து வாழ்ந்த இரண்டு குழந்தைகள் இன்று தாயை நிரந்தரமாக இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இது எல்லோருடைய நெஞ்சங்களையும் வருத்துகின்ற விடயமாக உள்ளது. எனவே இந்த நாட்டின் உயரிய தலைவராகிய தாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக உள்ள சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ளும் தாங்கள் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் அவர்களின் மனநிலை பாதிப்படையாத வகையிலும் தாயை இழந்த சோகத்தில் இருந்து விடுபடும் வகையிலும் இவர்களின் தந்தையாகிய சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை வழங்க வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

By admin