காரைதீவில் இன்று  ஸ்ரீராமகிருஸ்ணரின் 183வது ஜனனதினப்பெருவிழா!
இலங்கை இகிமி.தலைவர் சர்வருபானந்தா பிரதமஅதிதி: ஊர்வலம் அன்னதானம் 
(காரைதீவு  நிருபர் சகா)
 
பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ணபரமஹம்சரின் 183வது ஜனனதினவிழா இன்று  (23) வெள்ளிக்கிழமை காரைதீவில் ஊர்வலம் அன்னதானம் என்பவற்றுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கமும் பொதுமக்களும் இணைந்து இவ்ஏற்பாட்டைச்செய்துள்ளது.
காலையில் சாரதா சிறுமியர் இல்லத்திலிருந்து பகவான் ஸ்ரீராமகிருஸ்ணர் அன்னை சாரதா சுவாமி விவேகாகந்தர் ஆயியோரின் 3அழகியரதங்களின் ஊர்வலம் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலோடு நடைபெறும். தொடர்ந்து இல்லத்தில் ஆன்மீகஅருளுரையும் அன்னதானமும் நடைபெறவுள்ளது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராமகிருஸ்ணமிசனின் இலங்கைக்கான (கொழும்பு ) தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வருபானந்தா மஹராஜ் மட்டு.மாநிலத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தா மஹராஜ் ஆகியோர் கலந்துசிறப்பிப்பார்கள்.

By admin