தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை, ஆனால் முஸ்லிம் பகுதிகளில் அதிகளவான நிதியொதுக்கீடு!

(டினேஸ்)

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  (வியாழக்கிழமை) பாராளுமன்றில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருந்துத் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாண தமிழ் பிரதேச  ஆதார வைத்தியசாலைகளான  திருக்கோவில், வாழைச்சேனை  இரண்டிற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை ஆனால் நிந்தவூரில் ஏற்கனவே ஒரு வைத்தியசாலை இருந்தும் புதிதாக ஒரு வைத்தியசாலைக்கு 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது , அதே போல் சம்மாந்துறைக்கு 1200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது , பொத்துவில் , ஏறாவூர் வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுளள்து இது எந்த வகையில் நியாயம்  இப்படியான சம்பவங்களால் தான் இலங்கையில் இனவாதம் தலைதூக்குகிறது ஆகவே நிதி ஒதுக்கீடு சமமாக ஒதுக்கப்பட வேண்டும்

120 வருட பழமை வாய்ந்த வைத்தியசாலையான திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கட்டிட வசதி , வைத்திய நிபுணர்கள் , தாதிமார் பற்றாக்குறையாக உள்ளது யுத்த காலத்தில் பாதிக்கப்பட இந்த வைத்தியாசாலைக்கு நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Attachments area

By admin