பங்களாதேஷ் : பங்களாதேஷ் அகதிகள் முகாமில் அரங்கேறும் அவலம் . பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் ரோஹிங்கியா சிறுமிகள்…..

அண்மையில் மியன்மாரில் முஸ்லீம் மக்களுக்கு மீதான வன்முறையினால் அகதிகளாகரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் பங்களாதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். .இவர்கள் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
.இந்த நிலையில் பங்களாதேசத்தில் தங்க வைக்கப்பட் ட சிறுமிகள் உள்ளூர் வாசிகளால்
கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது .
தாய் தகப்பனை இழந்த 10 முதல் 15 வயதுக்கு இடைப்பட் ட ரோஹிங்கியா சிறுமிகள் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து செல்லும் உள்ளூர் மக்கள் சிலர், அந்த சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இதுகுறித்து அரசு சாரா அமைப்பு உளவு நிறுவனம் ஒன்று அகதிகள் முகாமுக்கு சென்று திரட்டிய தகவல்கள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
இதுகுறித்து உடனே வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது
அகதிகளாக வந்தவர்களை இப்படி பாலியல் தொழிலில் ஈட்டுபட வைக்கும் உள்ளூர் வாசிகளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் எனவும் அதே சமயம் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறுவதைத் தடுக்க சம்பந்தப்பட் ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .