“5 கோடி பேரின் தகவல் திருட்டு” பகிரங்க மன்னிப்புக் கோருகிறார் ஃபேஸ்புக் ( Face book )நிறுவனர்

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது.

அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் ‘ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘ஃபேஸ்புக் நிறுவனத்தின் பயனாளிகள் விவரங்களை வைத்துக் கொண்டு அந்நிறுவனம் பெருமளவில் வர்த்தகம் செய்துள்ளதையும், வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல கோடி ரூபாய் பணம் குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இதனால் ‘ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. பங்குச்சந்தைகளில் அந்நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவு சரிந்துள்ளன. இதனால் ‘ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

‘உலகம் முழுவதும் எழுந்துள்ள நெருக்கடி, பேஸ்புக் நிறுவனத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது மவுனத்தை கலைத்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், “ தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். வரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக்கொள்ளாது. கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்” என்றும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் மார்க் சூகர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்ககூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இதற்கான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்துள்ளோம். நாங்கள் சில தவறுகளையும் செய்துள்ளோம். அதை திருத்திக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியவன் என்ற அடிப்படையில் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்’’ எனக்கூறியுள்ளார்.

இதனிடையே ஃபேஸ்புக் விவகாரம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த நிறுவத்தின் ரகசிய காப்பு பிரிவு துணைத் தலைவர் ரோப் ஷெர்மென் அமெரிக்க எம்.பிக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் அமெரிக்க அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதுபோலவே சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றொரு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா , புகாருக்கு ஆளான தலைமை செயல் அதிகாரி அலெக்சாண்டர் நெக்ஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 

.