தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிராமாணம் செய்து கொண்டனர்!

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில்  தமிழ்ர் விடுதலைக் கூட்டணி சார்பாக வடக்கு கிழக்கில் போட்டியிட்டு    வெற்றிபெற்ற உறுப்பினர்கள் நேற்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை காரியாலயத்தில் நிருவாகச் செயலாளர் இரா.தங்கையா தலைமையில் நடைபெற்ற பதவிப்பிரமாண நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த சங்கரி , இ. ம.தே.கட்சியின் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன், ஆகியோரும் வெற்றி பெற்ற உறுப்பினர்களும், கட்சிப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனையில் தெரிவான காத்தமுத்து கணேஸ், சுமித்ரா ஜெகதீசன்  ஆகியோரும் பதவி பிராமாணம் செய்து கொண்டனர்.

தமிழர்  விடுதலைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி ஆர் எல் எப், ஈரோஸ் ஆகிய கட்சி சார்பாக வெற்றியீட்டிய உறுப்பினர்கள் இதில்  பங்குகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-சௌவியதாசன்-

By admin