கிழக்கில் 32சபைகளுக்கான முதல் அமர்வுகள்  27 முதல் ஏப்ரல் 16வரை!

கிழக்கில் 32 சபைகளுக்கான முதல்அமர்வுகள் 27 முதல் ஏப்ரல் 16வரை!
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சலீம் தெரிவிப்பு!
(காரைதீவு  நிருபர் சகா)

கிழக்கு மாகாணத்திலுள்ள 45உள்ளுராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மை
இல்லாத 32சபைகளுக்கான  முதல் அமர்வுகளுக்கான திகதிகளை கிழக்கு மாகாண
உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அறிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட மற்றும்
நிமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனி கடிதங்கள்
அனுப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமிடம்
கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 32சபைகளுக்கான முதல் அமர்வுகள் எதிர்வரும் 27ஆம்
திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பத்திரிகை விளம்பரம் என்பன ஓரிரு
தினங்களில் வெளிடப்படவுள்ளன.

அமர்வு பற்றிய விபரம்!
எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9.30மணிக்கு சம்மாந்துறை பிரதேசசபைக்கான
முதல் அமர்வும் காலை 11.30மணிக்கு காரைதீவு பிரதேசசபைக்கான முதல்அமர்வும்
மாலை 3மணிக்கு நிந்தவூர் பிரதேசசபைக்கான முதல் அமர்வும் நடைபெறவுள்ளது.

27ஆம் திகதி முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது
பிறந்ததினமான அன்று காரைதீவுப்பிரதேசசபைக்கான இந்த முதல் அமர்வு
நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுநாள் 28ஆம் திகதி அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம்
பிரதேசசபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறும். 29ஆம் திகதி  திருக்கோவில்
பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேசசபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் 2ஆம்  திகதி கல்முனை மாநகரசபைக்கான முதல்அமர்வும் நாவிதன்வெளி
பிரதேசசபைக்கான முதல் அமர்வும் நடைபெறும்.

மீதி பெரும்பான்மையின சபைகளுக்கான முதல் அமர்வுகள் ஏப்ரல் 16ஆம் திகதி
வரை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

By admin