தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டு அம்பாறை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சதியப்பிரமாணம் செய்தனர்!

-டினேஸ்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாளேந்தின், கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், கனகசபை, முன்னாள் மாகாணசபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், எம்.இராஜேஸ்வரன், த.கலையரசன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகிய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களால் உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாணம் வழங்கி வைக்கப்பட்டதுடன்இ உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்றுக் கோவை வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

 

By admin