சர்வதேச குறும்பட விழாக்களில் கல்முனை ஜோயலின் The Queen குறும்படம்!

கல்முனை Alpha Entertainment மற்றும் செல்வகுமாரின் தயாரிப்பில் இயக்குனர் ஜோயலின் The Queen குறும்படம் இதுவரை ஐந்து சர்வதேசவிழாக்களுக்கு தெரிவாகி உள்ளது. இதுவரை இரண்டு சர்வதேச விழாக்களில் வெற்றி பெற்றுள்ள இக்குறும்படம் அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் IFFC சர்வதேச குறும்பட விழாவில் மார்ச் மாதம் 29ம் திகதியும் , முதலாவது தெற்காசிய குறுந்திரைப்பட விழாவில் ஏப்ரல் 4ம் திகதியும் திரையிடப்படவுள்ளது.

இக்குறும்படத்தில் அஜய்காந் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதுடன், மனோஜிதன் ஒளிப்பதிவையும், ரொஜர் இசையமைப்பையும், தினேஸ் ஒலி வடிவமைப்பையும், கவிப்பிரியன் ஒப்பனையையும் , கிசோர் மற்றும் ரக்சனன் இணை இயக்குனர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

 

By admin