கல்முனையில் இனவாத கருத்தை வெளியிட்டதாக முஸ்லிம் அமைப்பால் முறைப்பாடு – தமிழ் சிங்கள நபர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

இனவாதக் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததையடுத்து குற்றம் சாட்டப்பட்வர்களான கல்முனையைச் சேர்ந்த ஜெசிங்க மற்றும் அருள்பிரகீர்த் ஆகியோர் இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐ.எல் றிஸ்வான் இவர்களை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களான முதலாவது சந்தேக நபர் கல்முனையைச் சேர்ந்த பிறப்பால் சிங்களவரான ஜெயசிங்க இரண்டாம் சந்தேக நபரான அருள்பிரகீர்த் ஆகிய இருவர் சார்பாகவும் முன் நகர்வு மனு தாக்கல் செய்து சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் ரமீஸ் ரிபாஸ் ஆகியோர் பிணைகோரி வாதாடி இருந்தார்கள்.

இவர்கள் உள்நோக்கம் கொண்டு இந்த வீடியோக்களை வெளியிடவில்லை கண்டி கலவரங்களையடுத்து கல்முனையிலும் கலவரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றபோது வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு ரயர்கள் எரிக்கப்பட்டிருந்தன அந்த சம்பவங்களையடுத்தே குறித் நபர் தனது ஆதங்கத்தை வீடியோவில் தெரிவித்திருந்த பதிவுகள் வெளியாகியிருந்தது அத்துடன் இரண்டாம் சந்தேக நபர் அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார். அவர்களுக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்ட்டு பிணை வழங்கக் கோரி சட்டத்தரணிகள் வாதாடியிருந்தும் பிணை கிடைக்கவில்லை.

இவர்களுக்கு எதிராக கல்முனை போரம் எனும் முஸ்லிம் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்திருந்தது குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகள் சிலரும் முறையிட்டவர்களுடன் சென்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். . அத்துடன் மூன்று பிரிவுகளில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் தமிழர்களுக்கு எதிராகவும் இனவாத கருத்துக்களுடன் வீடியோக்கள் சில வெளியாகியிருந்தன அத்துடன் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் இனவாதக் கருத்துக்களுடனும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன ஆனால் இவைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் மக்களால் முன்வைக்கப்படுகிறது.

 

By admin