ஜெனீவா ;மனித உரிமைக் கூட்டத் தொடரில் கல்முனையில் இருந்தும் ஒரு பிரதிநிதி சென்றார்!

ஐக்கிய நாட்டு மனித உரிமைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள மாணவர்மீட்புப்பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ். கணேஸ் பயணம்

ஐக்கிய நாட்டு மனித உரிமைக் கூட்டத்தொடரின் 37 அவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக கல்முனையில் இருந்து  மாணவர்மீட்புப்பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ். கணேஸ் ஜெனீவாசென்றுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழ்மக்களின் நிலைமைகள் தொடர்பாக உரையாற்ற இருப்பதுடன் கடந்த 34 ஆவது கூட்டத்தொடரில் இவர் கலந்துகொண்டு தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உரையாற்றியவர் அத்தோடு கிழக்குமாகாணத்தில் இருந்து கலந்துகொள்ளும் ஒரே ஒரு தமிழ்ப் பிரதிநிதி   என்பதும் குறிப்பிடத்தக்கது

By admin