நற்பிட்டிமுனை இந்து மயானத்தில் சிரமதானப்பணி!

-கிரிஷாந்-

நற்பிட்டிமுனை தமிழ் இளைஞர் அமைப்பினால்   ‘நற்பிட்டிமுனை இந்து மயானத்தை’ முற்றாக சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. 18 ஆம் தகிதி நடைபெற்ற இந்த சிரமதானப்பணியில் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

புனிதமாக பேணப்பட வேண்டிய மயானத்தை பராமரிக்க வேண்டிய பொறுப்பு நாம் எல்லோருக்கும் உள்ளது எனவே  பொதுமக்கள் மயானத்தில்  குப்பை கொட்டுவதை நிறுத்துவதுடன் குப்பை கொட்டுபவர்களையும் தடுக்க வேண்டும் என  நற்பிட்டிமுனை தமிழ் இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டனர்.

 

 

By admin