உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது மக்கள் நலன் காப்பகத்தின் நடுவகப்பணியகம்!

(டினேஸ்)

வட கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்காக மற்றும் வறிய மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வாயிலாக  உதயமாகின்றது மக்கள் நலன் காப்பக பணியகம்.

இதன் உத்தியோகபூர்வ நடுவகபணியகம் திறப்பு விழா  18 ஆம் திகதி காலை 11.45 மணிக்கு ஏ 9 கரடிப்போக்கு கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்றது.

இதன் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 50 குடும்பத்தார்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான காசோலைகளும் கல்வி வளர்ச்சிக்கான வங்கி பற்றுச்சீட்டுக்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin