முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இந்திய அணியை நிமிர்த்திய இந்திய அணியின் வீரன்தினேஷ் கார்த்திக்.. 

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் – இந்திய அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்த இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற தினேஷ் கார்த்திக் கூறியதாவது: இப்படி ஆடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆகவே இறுதிப்போட்டியில் வெல்லாமல் போயிருந்தால் அது துரதிர்ஷ்டம்தான்.

நான் கடுமையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டேன், அதாவது பந்து வரும் திசையிலேயே அடிப்பதற்கான அடிப்படைகளை மேற்கொண்டு வந்தேன். அதிர்ஷ்டவசமாக இன்று கைகொடுத்தது. வாய்ப்பு கிடைக்க கடினமான ஒரு அணி இந்திய அணி, ஆனால் ஒருமுறை பெற்ற வாய்ப்பை விட்டுவிடக்கூடாது, உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.