முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : சொந்த மண்ணில் சுதந்திர கோப்பையை தவற விடட இலங்கை அணி. இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றன இந்தியா-பங்களாதேஷ் அணிகள்……..

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதும் சுதந்திர கோப்பைகோப்பை டி20 இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் கொழும்பு சுகாதாதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த முத்தரப்பு டி20 தொடரில் ஏற்கனவே இந்திய அணி 3 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுடன் மோதும் அணிக்கான போட்டி கடந்த 16ம் தேதி நடந்தது. இதில், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதின. ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், வங்கதேச வீரர்கள், இலங்கை வீரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எனினும், கடைசி கட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இலங்கை அணியுடன் அரையிறுதிப் போட்டியில் முட்டி மோதி, இறுதியில் வெற்றி வாகை சூடிய அதே பலத்துடன் பங்களாதேஷ் அணி இருப்பதால், இந்திய அணி சற்று கடினமாக போராட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதில், மழை குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிற்பகலிலோ அல்லது மாலை நேரத்திலோ இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக 19 ஓவர்களாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.