கோடம்பாக்கம் வலம் : விஸ்வரூபம் 2-க்கு யு/ஏ சான்று: கமலை டென்ஷனாக்காமல் படம் ரிலீஸாகுமா?

 கமல் ஹாஸன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளித் தள்ளிப் போனது. இந்நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று கமல் தெரிவித்துள்ளார். கமல் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் 2 தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாக உள்ளது. விஸ்வரூபம் படம் பெரிய பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானது. கமல் நாட்டை விட்டு வெளியேறக் கூட திட்டமிட்டார். விஸ்வரூபம் 2 அது போன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை விட விஸ்வரூபம் 2 மிகவும் விறுவிறுப்பாக இருக்குமாம்.