சீனா: சீனாவின் புதிய அரசுத் தலைவர்கள்…..சீனப் பிரதமராக லீ கெக்கியாங் 2-வது முறையாகத் தேர்வு

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-வது தலைவரான லீ கெக்கியாங் 2-வது முறையாக பிரதமராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜிங்பிங்கை சீன நாடாளுமன்றம் ஏற்கனவே தேர்வு செய்துள்ள நிலையில், அடுத்ததாக, பிரதமராக லீ கெக்கியாங்கையும் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 5ஆவது முழு அமர்வு 17ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைமுக வாக்கெடுப்பு மூலம், ஷிச்சின்பிங் சீன மக்கள் குடியரசின் தலைவராகவும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் பிரதமராக லீ கெக்கியாங் 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அதிகாரம் படைத்த தலைவராக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்தான் வலம் வருவார். ஒட்டுமொத்த அதிகாரமும் ஜின்பிங்கிடம் குவிந்திருப்பதால், ரப்பர்ஸ்டாம்ப்பாக மட்டுமே லீ கெக்கியாங் இருப்பார்.

மேலும், லீ ட்சான்ஷு, 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவராகவும், வாங் ச்சீஷான், சீன துணை அரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த முழு அமர்வுக்குப் பின், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பற்றுடன் இருப்பேன் என்று உறுதிமொழி எடுக்கும் விழா நடைபெற்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் அமைப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, சீனத் தலைவர்கள் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தில் இவ்வாறு உறுதிமொழி எடுப்பது இதுவே முதன்முறை.