“தமிழ் மக்கள் மீது மாற்றுமொழி திணிக்கப்படுகிறது”   காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி….

இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் 84-வது மகாநாடு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மகாநாட்டில் இந்த மகாநாட்டில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது ஆளும் பா.ஜ.க அரசுஊக்கு எதிராக பல குற்றச்ச்சாட்டுகளை முன்வைத்தார் .
பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவிற்காக போராடிய இஸ்லாமியர்களை இந்தியர்கள் கிடையாது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தமிழர்களை அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு வற்புறுத்துகிறார்கள். வடகிழக்கு மாநில மக்களிடம் நீங்கள் சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள், பெண்கள் ஒழுங்காக உடையணிய வேண்டும் என்கிறார்கள்
தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது எனவும் ஸ்திரமாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.