(காரைதீவு நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தில் ஜக்கியதேசியக்கட்சி தனித்துப் போட்டியிட ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேச அமைப்பாளர்களான ஆதம்லெவ்வை(பொத்துவில் தொகுதி) சட்டத்தரணி றசாக்(கல்முனைத்தொகுதி) ஹசன்அலி(சம்மாந்துறைத்தொகுதி) ஜ.தே.கட்சியின்  அம்பாறைமாவட்ட முகாமையாளர் டாக்டர் சுரேஸ்டி சில்வா தமிழ்ப்பிரதேசங்களின் இணைப்பாளர் பி.வினோகாந் ஆகியோர் அம்பாறை மாவட்ட பிரதம அணைப்பாளரும் மாவட்டத்தலைவருமான பெற்றோலியவளத்துறை  பிரதியமைச்சர் டாக்டர் அனோமா கமகேயிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம்   (08) புதன்கிழமை மாலை கொழும்பு ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற கலந்தரையாடலில் இவ்வாலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அமைப்பாளர்கள் இம்முறை ஜ.தே.கட்சிஅம்பாறை மாவட்டத்தில்  தனித்து தேர்தலில் குதிக்கவேண்டும் என வலியுறுத்திக்கூறியுள்ளார்கள். அதனை மாவட்டத்தலைவர் என்றவகையில் பிரதியமைச்சர் அனோமாகமகே ஏற்றுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஜ.தே.கட்சியும் இணைந்து போட்டியிடுவது குறித்தும் இன்று உயர்மட்டச்சந்திப்புகள் இடம்பெற்றன.

தமிழ்ப்பகுதியிலும் சிங்களப்பகுதியிலும்  50 க்கு 50 வீதம் மு.கா.விற்குத் தரப்படவேண்டுமெனக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருந்தபோதிலும் எனினும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லையெனத் தெரிகிறது.

எதுஎப்படியிருந்தபோதிலும் மாவட்ட அமைப்பாளர்கள் குறிப்பாக முஸ்லிம் அமைப்பாளர்கள் ஜ.தே.கட்சி.தனித்து களமிறங்கவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதாகத் தெரிகிறது.

By admin