(காரைதீவு நிருபர்)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று கல்முனைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ரெலோ உறுப்பினர்களையும் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன், வெற்றி பெற்றமைக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.

மேலும், சபை நடாத்துவது தொடர்பிலுள்ள சட்டதிட்டங்கள் கட்சி கட்டுப்பாடு பற்றியும் விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வு ரெலோ உபமுதல்வர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

By admin