நாசா : விண்கலத்தை வைத்து எரிகல்லை உடைக்க திட்டம்!….

சூரியனை சுற்றி ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கிறோம். இந்த எரிகல் பூமியை நோக்கி வரும் போது பல பாதிப்புகளை ஏற்படுத்துகொன்றன.

பூமியை நோக்கி வரும் சில எரிகற்கள் சில சமயத்தில் பூமியில் மீதும் வந்து விழுகின்றன. தற்போது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாக அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த எரிகற்களில் சில பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாம்.
அதிலு முக்கியமாக தற்போது பென்னு என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகிறது. அது 1600 அடி அகலம் உள்ளது. இந்த எரிகல் மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது.
பூமியில் இருந்து சுமார் 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ள இந்த எரிகல் பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும். இதன் செயல்பாடு கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த எரிகல்லை விண்ணிலேயே விண்கலம் மூலம் உடைத்து நொறுக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய விண்கலமொன்று தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.