முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் : பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல்ஹசனுக்கு 25% அபராதம் நடுவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் எதிரொலி…

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர், கொழும்பில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் இலங்கை அணியும் மோதின. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக ஆட்டத்தின் கடைசி ஓவரில், இலங்கை பந்து வீச்சாளர் நோ பால் வீசியதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கும் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் தண்ணீர் கொடுக்க வந்த ட்ட வீரர் இலங்கை அணி தலைவர் ஏதோ கூறியதாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர், நடுவர்களுடன் பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஐசிசி ஒழுக்காற்று விதிமுறைகளை மீறியதாக பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹாசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இருவருக்கு எதிராகவும் நிலை 1 டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

Broken glass panels in the Bangladesh dressing room after Bangladesh cricket team’s T20 match against Sri Lanka cricket team in Nidahas Trophy on Friday.
இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வு அறை கண்ணாடி​யை யாரோ ஒரு வீரர் உடைத்துள்ளார். அதை அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்துபங்களாதேஷ் வீரர்களிடம் நஷ்ட ஈடு கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட  பங்களாதேஷ் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.