கல்முனை மாநகரசபைக்கு நான்கு தமிழ் பெண் பிரதிநிதித்துவம்!

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்கு விகிதாசாரம் மூலம் மேலதிக ஆசனங்களுக்காக நான்கு தமிழ் பெண் பிரதிநிதித்துவம் உட்பட நான்கு தமிழர்கள்   தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

வெளியாகியுள்ள அறிவித்தலின்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த இரண்டு மேலதிக ஆசனங்களுக்காக காத்தமுத்து கணேஸ், சுமித்ரா ஜெகதீசன் ஆகியோரும், ஜக்கிய தேசியக் கட்சி சார்பாக நடராசா நந்தினி, கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி,சுயேச்சை அணியில் போட்டியிட்ட அனஸ்ரிராகல் செலெஸ்தினா ஆகியோர் கட்சிகளுக்கு கிடைத்த மேலதிக ஆசனங்களுக்காக கட்சிகளின் தெரிவுக்கமைய இவர்கள் தெரிவாகியுள்ளார்கள்

காத்தமுத்து கணேஸ்- பாண்டிருப்பு

சுமித்ரா ஜெகதீசன்- கல்முனை

நடராசா நந்தினி -நற்பிட்டிமுனை
கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி- பாண்டிருப்பு

அனஸ்ரிராகல் செலெஸ்தினா- கல்முனை

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த மேலதிக இரண்டு ஆசனங்களுக்கு காத்தமுத்து கணேஸ் மற்றும் பெரியநீலாவணையில் போட்டியிட்ட கமலதாசன் ஆகியோரின் பெயர்கள் கட்சியின் தலைமையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செய்தியும் வெளியாகியிருந்தன.   ஆனால் புதிய  தேர்தல் சட்டத்திற்கமைய பெண்களுக்கான விகிதாசரம் கட்டாயம்  வழங்கப்பட வேண்டும் என தேர்தல்  திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய கமலதாசனுக்கு பதிலாக பட்டியல்  வேட்பாளரான சுமித்ரா ஜெயகதீசனின்   பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   ஏழு உறுப்பினர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வெற்றி பெற்றிருந்தன தற்போதைய மேலதிக ஆசனங்களுக்கான அறிவித்தலின்படி நான்கு தமிழர்கள் உட்பட 13 தமிழ் பிரதிநிதித்துவம் கல்முனை மாநகரசபைக்கு கிடைத்துள்ளது.

 

By admin