அட்டப்பள்ள விவகாரம் தொடர்பான வழக்கு :
 23பேரும் ஆஜர்: ஜூன்1ல் அடுத்ததவணை ! 
(காரைதீவு   நிருபர் சகா)

 

அட்டப்பளம் இந்து மயான விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று(16) வெள்ளிக்கிழமை  சம்மாந்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 23பேரும் நேற்று ஆஜர்செய்யப்பட்டனர்.

அட்டப்பள மக்கள் சார்பில் சிரேஸ்ட்ட சட்டத்தரணி சந்திரமணி தலைமையிலான குழுவினர் ஆஜராகி வாதிட்டனர்.

சமர்ப்பணத்தின்பின்னர் நீதிவான் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அடுத்தவணைத்திகதியான ஜூன் மாதம் 1ஆம் திகதி அனைவரும் ஆஜராகவேண்டும் என உத்திரவிடப்பட்டது.

நிந்தவூர் அட்டப்பள்ள இந்து மயான விவகாரம் தொடர்பாக  இடம்பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தின்போது இரு அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதன் எதிரொலியாக அட்டப்பளத்தைச்சேர்ந்த 23 தமிழ்பொதுமக்கள்  அழைக்கபட்டு அவர்களில் இருபெண்களுக்கு பிணை வழங்கப்பட்டு  மிகுதி 21ஆண்களையும் 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தமையும்  பின்னர் இருநாட்களில் அவர்கள் அடுத்த தவணை 16.03.2018 எனக்குறிப்பிட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமையும் தெரிந்ததே.

அதன்படி நேற்று(16) வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் சம்மாந்துறை நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அதன்டபோதே மேற்கண்ட தவணை அறிவிப்பு வெளியாகியது.

வழக்கிற்காக அட்டப்பள மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.அவர்களுக்கு ஆதரவாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் ; காரைதீவு பிரதேசசபைக்குத்தெரிவான பிரதிநிதிமான கி.ஜெயசிறில் நின்றிருந்தார்.

 

By admin