இத்தாலி :  இத்தாலியில் பழமையான சிலை அருகே சிறுநீர் கழித்ததால் அமெரிக்க சுற்றுலா பயணிக்கு இலங்கை மதிப்பின்படி ரூ.16 லட்சம் அபராதம்…..

அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இத்தாலிக்கு சுற்றுலாவுக்கு சென்றார். அங்குள்ள 16ஆம் நூற்றண்டின் பழமையான சிலையான ஹெர்குலஸ் சிலை அருகே அவர் சிறுநீர் கழித்துள்ளார்.

இத்தாலி மக்களால் புனிதமாக போற்றப்படும் அந்த சிலையில் அருகே அமெரிக்க சுற்றுலாப் பயணி சிறுநீர் கழித்ததை பார்த்த பாதுகாவலர் உடனே அவரை பிடித்து உள்ளூர் காவல் துறையிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரணை செய்த இத்தாலியா காவல் துறை , இது கிரிமினல் குற்றம் இல்லை என்றாலும் அவருக்கு இலங்கை மதிப்பில் ரூ16 லட்சம் அபராதம் விதித்தனர்.

அபராதத்தை கட்ட தவறினால் சிறையில் அடைக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டார். இதனால் வேறு வழியின்று அந்த சுற்றுலா பயணி அபராதத்தை கட்டிவிட்டு தனது நாட்டிற்கு திரும்பி சென்றுவிட்டார்.