அவுஸ்திரேலியா கரையோர பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி ரோமன் க்வெவ்வ்லீக் (Roman Quaedvlieg )பணி நீக்கம்…..

அவுஸ்திரேலியா கரையோர பாதுகாப்பு துறைக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி ரோமன் க்வெவ்வ்லீக் ( Roman Quaedvlieg ) அவரின் காரியாலயத்தில் பணி புரியும் ஒரு இளம் பெண் ஊழியருடன் கொண்டிருந்த நெருங்கிய பாலியல் தொடர்பு , விசாரணைகளின் பின்பு நிரூபிக்கப் படடதைத் தொடர்ந்து பணி நீக்கம்ப செய்யப்பட்டார்

என்று அரசு தரப்பில் செய்திகள் தெரிவிக்கின்றன
மேலும் சிட்னி விமான நிலையத்தில் தனது பெண் தோழியை பணியில் அமர்த்துவதற்கு தன் செல்வாக்கை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்ச்சாட்டும் அவர் மேல் சுமத்தப் பட்டுள்ளது
ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு சட்டம் 2015 இன் பிரிவின் 21 வது பிரிவின் கீழ் தவறான நடத்தை மற்றும் பதவியை துஸ்ப்பிரயோகம் செய்தல் போன்ற பிரிவின் அடிப்படையில் இந்த பணி நீக்கம் செய்யப் பட்டதாக அரசு தரப்பில் கூறப் படுகிறது .
“நான் பதவி நீக்கம் செய்வதற்கு முன்னரே ராஜிநாமா செய்ய ஒரு சிறிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன், ஆனால் அதை நான் செய்யவில்லை, ஏனெனில் இது ஒரு குற்றச்சாட்டுக்கான சலுகையாக உள்ளது, நான் கடுமையாக மறுக்கிறேன்,” என்று திரு குவாட்வில்லி செய்தி ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இது பற்றி குடிவரவு மற்றும் குடிபெயர்வு அமைச்சர் பீட்டர் டட்டன் ( Peter Dutton )நேற்று 2GB வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். “இந்த பணி நீக்கம் ஒரு நிர்ப்பந்தமான ஓன்று , அதனால் நான் என் சார்பில் சொல்ல கருத்து இல்லை.. அவர் மற்றும் அவரது காதலி, அவரது முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகள், இவர்களுக்கு இது ஒரு துர்பாக்கிய சம்பவம் என்று குறிப்பிட்டார்

ஆளுநர்-ஜெனரல் மற்றும் பிரதம மந்திரியையும் உள்ளடக்கிய பெடரல் நிர்வாகக் குழு, நேற்றய கான்பெர்ராவில் (CANBERAA )_ கூடி திரு குவட்விக்ஜியின் பணி நீக்கத்தை உறுதி செய்தது

முடிவின் அடிப்படையில் அறிக்கை பின்னர் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.