(காரைதீவு நிருபர் சகா)

ஜரோப்பிய ஜூனியன் பிரதிநிதிகள் நேற்று(7) சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளிக்கோட்ட சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து தமது நிதிஉதவித்திட்டத்தின்கீழ் யுனிசெவ் மற்றும் பிளன்ஸ்ரீலங்கா ஸ்தாபனம் நிறைவுசெய்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக மதிப்பீடு செய்தனர்.

 

அச்சமயம்சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து மற்றும் யுனிசெவ் பிளன்ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

அங்கு ஆரம்பப்பிரிவு  இடைநிலைக்கல்விப்பிரிவு  ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜரோப்பிய பிரதிநிதிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என விலாவாரியாக சகலசெயற்பாடுகளையும் கேட்டறிந்தனர்.

பாடசாலையில் இடம்பெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் காணொளி சமர்ப்பணம் செய்யப்பட்டது. காலை 8.30மணிக்கு ஆரம்பமான மதிப்பீடு பிற்பகல் 2மணிக்கு நிறைவுற்றது.

 

இறுதியில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

By admin