கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற தமிழ் பிரதேச செயலக கலாசார விழா!

கல்முனை தமிழ் பிரதேச செயலக கலாசார பேரவையினால் ”எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு” எனும் தொனிப்பொருளில் கலாசார விழா கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் (15) நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், பேராசிரியர் எஸ்.மௌனகுரு, அம்பாறை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன்  மற்றும் மதகுருமார்கள், கலைஞர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அதிகளவானோர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் பாரம்பரிய நடனங்கள் என்பன மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

‘முனையம்’ மலர் வெளியீடு 

கல்முனை பிரதேசத்தின் சிறப்புக்கள், வரலாறுகள் ,மற்றும் கல்முனை பிரதேச கலைஞர்களின் ஆக்கங்கள் அடங்கியதான எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களின் தொகுப்பில் உருவான   கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின்  ‘முனையம்’  மலரும்   வெளியீட்டு வைக்கப்பட்டன.

 

அத்துடன் இந் நிகழ்வில் இப் பிரதேசத்தைச் சேர்ந்த   கலைஞர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

நிகழ்வின் நுழைவாயில் தோரணம் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினரால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி அழகாக அமைத்திருந்தனர்.

 

 

விருதும் , கௌரவமும் பெற்றோர் விபரம்.

——————————————————————————————————–

திரு.சரவணமுத்து அழகையா (1936)

திரு.மாணிக்கம் கனகசுந்தரம் (1937)

திரு.வயிரமுத்து ஞானமாணிக்கம் (1939)

திரு.முருகேசு சடாட்சரன் (1940 )

திரு.நாகமணி விநாயகமூர்த்தி (1940)

திரு.வேலுப்பிள்ளை சண்முகநாதன் (1942)

திரு.பொன் .செல்வநாயகம் (1942)

சிவஸ்ரீ முருகேச பிள்ளை நல்லதம்பி குருக்கள் (1943)

திரு.கிருஷ்ணபிள்ளை சுந்தரநாதன் (1944)

திரு.தினகரன்பிள்ளை செல்லத்துரை (1944)

திரு.பூபாலபிள்ளை நமசிவாயம் (1945)

திரு.வயந்தராசபிள்ளை சுப்பிரமணியம் (1946)

திரு.சிவகாமி நாதன் சிவகுருநாதன் (1947)

திரு.பொன்னையா ஏகாம்பரம் (1947)

திரு.பொன்னையா கணேசன் (1950)

திரு.கணபதி ஐயர் யோகராஜா ஐயர் (1950)

திரு.கணபதிப்பிள்ளை பாக்கியராசா (1951)

திரு.காளிக்குட்டி சந்திரலிங்கம் (1951)

திரு.சுப்பிரமணியம் அரசரெத்தினம் (1952)

திருமதி.விமலேஸ்வரி கிருபைராஜா (1952)

செல்வி.நோணிஸப்பு சரோஜா (1952)

திரு.வைரமுத்து கணேசன் (1953)

திரு.பூபாலபிள்ளை சரவணபவன் (1953)

திரு.சபாரெத்தினம் சபேசன் (1954)

திரு.உமா வரதராஜன் (1956 )

கலாநிதி.பரதன் கந்தசாமி (1957)

திரு.கதிரமலை நவமணி (1957)

திரு.சாமித்தம்பி விக்னேஸ்வரன் (1960)

திரு.ஜெயக்கொடி டேவிட் (1963)

திருமதி.திரேஸ் கமலினி பத்திரண (1965)

திருமதி.மாதுமையாள் வரதராஜன் (1965)

திருமதி.நிர்மலா தம்பிராஜா (1965)

By admin