அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் கடைசி நேரத்தில் அவுஸ்திரேலியா குடிவரவு அதிகாரிகளால் இறக்கி விடப்பட்ட்னர்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் கடைசி நேரத்தில் இறக்கிவிடப்பட்டது. விசா விவகாரத்தில் இலங்கைத் தமிழரான நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா, குழந்தைகள் கோபிகா, தருணிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பாடுவதற்காக அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதேநேரத்தில் இவர்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகதிகள் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடாத்தி வந்த அதே சமயம் சட்டரீதியான செயல்ப்பாடுகளையும் முன்னெடுத்து எதிரப்பை வெளிக்காட்டி வந்தனர் என்பதும் முக்கியமாக இங்கு குறிப்பிடத்தக்கது .

. இந்த நிலையில் இத்தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்த விமானத்தில் ஏற்றிய அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால்    திடீரென கடைசி நேரத்தில் இக்குடும்பம் விமானத்தில் இருந்து இறக்கி வைக்கப் பட்டதாக அகதிகள் அமைப்பை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன

சட்டப்பூர்வமான அழுத்தம் காரணமாகவே நாடு கடத்தப் படும் முயற்சி  கடைசி நேரத்தில்    கைவிடப் பட்டதாக கூறப்படுகிறது.

 

.