இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)  வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்…….

மரணமடைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் வாழ்வில் எடுக்கப்பட்ட சில முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு.

தனது 22ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதல் மனைவி ஜேன் உடனான திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, அவர் ஓரிரு ஆண்டுகளே வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் 26 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

2007இல் புவியீர்ப்பு விசை இன்மை செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விமானத்தில் பயணிக்கும் முதல் கை கால்கள் செயலிழந்த நபரானார் ஸ்டீஃபன் ஹாக்கிங்   – 

2017இல் ‘ஹோலோகிராம்’ தொழில்நுட்பம் மூலம் கேம்பிரிட்ஜில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.   –

பிரிட்டன் ராணி எலிசபெத்துடன் 2014இல் நடந்த ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் ஸ்டீஃபன் ஹாக்கிங்   –  

தனது செவிலியர்களின் ஒருவரான எலைன் மேசனை 1995இல் ஸ்டீஃபன் ஹாக்கிங் மணந்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்குள் மணமுறிவு ஏற்பட்டது.   

சக்கர நாற்காலியில் பெரும்பாலான காலத்தைக் கழித்த ஸ்டீஃபன் ஹாக்கிங், செயற்கையாக குரல் எழுப்பும் கருவி மூலமே பேசினார்.   – 

ஸ்டீஃபன் ஹாக்கிங்-இன் வாழ்க்கை வரலாறு ‘தி தியரி ஆஃப் எவெரிதிங்’ எனும் பெயரில் ஆங்கிலத் திரைப்படமாக எடுக்கப்பட்டது.   

அறிவியல் மற்றும் கணிதவியலில் பல விருதுகளை வென்றுள்ள ஸ்டீஃபன் ஹாக்கிங், 2009இல் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் கௌரவம் மிக்க ‘பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்’ பதக்கத்தைப் பெற்றார்   

ஸ்டீஃபன் ஹாக்கிங் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு அறிவியல் வகுப்புகள் எடுத்துள்ளார்   –  

2017இல் ‘ஹோலோகிராம்’ தொழில்நுட்பம் மூலம் கேம்பிரிட்ஜில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.   –