இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)தனது 76ஆவது வயதில் நேற்று இங்கிலாந்தில் காலமானார்…

எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன என்று ஒரு முறை கூறினார் ஸ்டீஃபன் ஹாக்கிங். அந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டாரா என்று தெரியவில்லை. 76 வயதில் இந்த பூவுலகை விட்டு சென்றிருக்கிறார் ஹாக்கிங்.”

பிரபஞ்சத்தின் இரகசியங்களைத் திறக்க முயன்ற ஸ்டீபன் ஹாக்கிங் 76 வயதில் இறந்துள்ளார் மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், அவரின் புத்திக்கூர்மை மங்கவில்லை. வானவியல் எதிர்காலம் மற்றும் ஏலியன்கள் பற்றி பல முக்கிய கருத்துகளை அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் நேற்று மரணமடைந்தார். இவரின் இழப்பு உலக விஞ்ஞானிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள

 

விஞ்ஞானி ஸ்டீபன் மறைவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள சக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ன சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் விஞ்ஞானி ஸ்டீபனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘இந்த உலகம் ஒரு அழகான மனதை உடையவரையும், அதிபுத்திசாலித்தனமான விஞ்ஞானியையும் இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.