பாகிஸ்தான் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்; 9 பேர் பலி .காயமடைந்த 25 பேரில் 5 போலீசார் கவலைக்கிடம்…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் இல்லத்திற்கு அருகே உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் ஒரு தலிபான் தீவிரவாதி ஒருவன் அவற்றை வெடிக்க செய்துள்ளான்
இந்த சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 ஆய்வாளர்கள் மற்றும் 3 கான்ஸ்டபிள்கள் உள்பட 5 பேர் போலீசார். தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேர் போலீசார். 4 போலீசாரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இது தாக்குதலில் ஈடுபடடவனுக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தஹ்ரீக் இ தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தானின் (TTP) போர்க்குணம் கொண்ட குழுவால் AFP க்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் பஞ்சாபில் “கூட்டாளிகள்” கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தீவிரவாதிகள் பொலிசுக்கு இந்த தாக்குதலை நடாத்திய தாக்க தெரிவித்திருந்தனர்

 

V