பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளதுடன் அவர்களுக்கும் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் பேஸ்புக் மீதான தடை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இனவாதம் மற்றும் மதவாதங்களை தூண்டும் வகையிலான மற்றும் வெறுப்புணர்வு கருத்துக்களை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு அந்த நிறுவனத்தினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறான பதிவுகளை நீக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இது தொடர்பான கலந்துரையடலுக்காகவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By admin