நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள கல்முனை தமிழ் பிரதேச செயலக கலாசார விழா!

ல்முனை தமிழ்ப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசார விழா -2018

கல்முனை தமிழ் பரிவு பிரதேச செயலக கலாசார விழா நாளை 15 ஆம் திகதி மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. மேற்படி விழா நாளை  பி.ப .3.30 க்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது .

விழாவின் நிகழ்வுகளுக்கு கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் திரு .கே.லவநாதன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார் .

இவ் விழாவின் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு சுசித்த  வணிகசிங்ஹ  ஆகியோரும் இ கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சி .மௌனகுரு , தென்கிழக்குப் பலகலைக்கழக மொழித்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் றமீஸ் ஏ அப்துல்லாஹ் , தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு . க.குணராசா ஆகியோரும் , சிறப்பதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.விமலநாதன் , கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள்  திணைக்களப் பணிப்பாளர் திருமதி . வளர்மதி ரவீந்திரன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.இரா .முரளீஸ்வரன் , கல்முனை கல்வி வலயபிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு .வே.மயில்வாகனம் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

உரைகள் ,கலை நிகழ்ச்சிகள் ,  ‘முனையம்’ மலர் வெளியீடு , விருதுகள் வழங்கல் என்பன அன்றைய தினம் இடம் பெறவுள்ளன .

 

‘முனையம்’ மலர்

——————————–

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின்  ‘முனையம்’ மலர்  15.03.2018  அன்று கல்முனையில் நிகழவிருக்கும் கலாசார விழாவின் போது வெளியிட்டு வைக்கப் படவுள்ளது .

இந்த மலர் 138 பக்கங்களைக் கொண்டதாக A4 சைஸில் அமைந்துள்ளது .இவற்றில் பத்துப் பக்கங்கள் வர்ணத்தில் அமைந்திருக்கின்றன . ஆசிச் செய்திகள் மூன்றும்  , வாழ்த்துச் செய்திகள் நான்கும்  இடம் பெற்றிருக்கின்றன .

இந்த மலரில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தொகை பதினெட்டு .  இவற்றுள் 15 கட்டுரைகள் கல்முனை தமிழ்ப் பிரதேசத்தின் கலை-இலக்கிய முயற்சிகள், பண்பாட்டுக் கோலங்கள் , ஊர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை .மூன்று கட்டுரைகள் உள்ளூர் எல்லைகளைக் கடந்து கரிசனைக்குரிய இதர விஷயங்களைப் பேசுகின்றன .கட்டுரைகளுக்குத் தேவையான ஒளிப்படங்களும் பயன் படுத்தப் பட்டுள்ளன .

இந்த மலரில் ஐந்து சிறுகதைகளும் , இருபத்தொன்பது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன . மரபின் வேரையும் , நவீனத்தின் விழுதுகளையும் இந்தப் படைப்புகள் கொண்டிருக்கின்றன . பல் வேறு வகையான சிந்தனைகளுக்கும், இலக்கியப்  போக்குகளுக்கும் இந்த மலரில் இடமளிக்கப் பட்டுள்ளன .

அட்டைப் படத்துக்கான அழகான ஓவியமொன்றை வரைந்து தந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் மருது அவர்கள் .

இவ்விழாவில் கௌரவம் பெறும் கலை –இலக்கிய வாதிகள் ,சமூக செயற்பாட்டாளர்கள் 32 பேர்களைப் பற்றிய சிறு குறிப்புகளுக்கும் ,படங்களும் இம்மலரில் இடம் பெற்றுள்ளன .

‘மறைந்த ஆளுமைகள் ‘ என்ற தலைப்பில் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து ,மறைந்து , ‘மறைந்தும் மறையாதவர்களா’க பலருடைய நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் முப்பத்து நான்கு பேர்கள் பற்றிய சுருக்கமான குறிப்புகளும் ,அவர்களுடைய புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன .

இம் முனையம் மலரின் தொகுப்பாசிரியர் எழுத்தாளர் உமா வரதராஜன் ஆவார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை விருதுகள் – 2017
இப் பிரதேசத்திலுள்ள மூத்த கலை-இலக்கிய வாதிகளினதும் ,சமய,சமூக செயற்பாட்டாளர்களினதும் இற்றை வரைக்குமான பங்களிப்பைக் கருத்திற் கொண்டு அவர்களை கௌரவிக்கும் விதத்தில் இவ் விருதுகள் வழங்கப் படுகின்றன.
இத் தேர்வின் போது வயது , ஆற்றல் , பங்களிப்பு ,ஏற்கனவே வெளியுலகில் அவர் பெற்ற அங்கீகாரம் ,சமூகத்துடன் அவருக்குள்ள ஒட்டுறவு என்பன  கவனத்தில் கொள்ளப் பட்டன .
இவ் அடிப்படையில் கலாசாரப் பேரவையின் உறுப்பினர்கள் மத்தியிலும் ,பின்னர் தேர்வுக் குழு மட்டத்திலும் பல கட்டங்களில் நிகழ்ந்த ஆலோசனைகளின் இறுதியில் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் .

விருது பெற்றவர்களின் பெயர்களும் , அவர்களுடைய தகைமைகளும் இங்கே தரப் படுகின்றன .

 

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசார விழா -2௦18 ல்

விருதும் , கௌரவமும் பெறுவோர் விபரமும், வரிசையும்

——————————————————————————————————–

திரு.சரவணமுத்து அழகையா (1936)

திரு.மாணிக்கம் கனகசுந்தரம் (1937)

திரு.வயிரமுத்து ஞானமாணிக்கம் (1939)

திரு.முருகேசு சடாட்சரன் (1940 )

திரு.நாகமணி விநாயகமூர்த்தி (1940)

திரு.வேலுப்பிள்ளை சண்முகநாதன் (1942)

திரு.பொன் .செல்வநாயகம் (1942)

சிவஸ்ரீ முருகேச பிள்ளை நல்லதம்பி குருக்கள் (1943)

திரு.கிருஷ்ணபிள்ளை சுந்தரநாதன் (1944)

திரு.தினகரன்பிள்ளை செல்லத்துரை (1944)

திரு.பூபாலபிள்ளை நமசிவாயம் (1945)

திரு.வயந்தராசபிள்ளை சுப்பிரமணியம் (1946)

திரு.சிவகாமி நாதன் சிவகுருநாதன் (1947)

திரு.பொன்னையா ஏகாம்பரம் (1947)

திரு.பொன்னையா கணேசன் (1950)

திரு.கணபதி ஐயர் யோகராஜா ஐயர் (1950)

திரு.கணபதிப்பிள்ளை பாக்கியராசா (1951)

திரு.காளிக்குட்டி சந்திரலிங்கம் (1951)

திரு.சுப்பிரமணியம் அரசரெத்தினம் (1952)

திருமதி.விமலேஸ்வரி கிருபைராஜா (1952)

செல்வி.நோணிஸப்பு சரோஜா (1952)

திரு.வைரமுத்து கணேசன் (1953)

திரு.பூபாலபிள்ளை சரவணபவன் (1953)

திரு.சபாரெத்தினம் சபேசன் (1954)

திரு.உமா வரதராஜன் (1956 )

கலாநிதி.பரதன் கந்தசாமி (1957)

திரு.கதிரமலை நவமணி (1957)

திரு.சாமித்தம்பி விக்னேஸ்வரன் (1960)

திரு.ஜெயக்கொடி டேவிட் (1963)

திருமதி.திரேஸ் கமலினி பத்திரண (1965)

திருமதி.மாதுமையாள் வரதராஜன் (1965)

திருமதி.நிர்மலா தம்பிராஜா (1965)

By admin