சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாமும் சிறப்பு நிகழ்வும் பாண்டிருப்பில் நடைபெற்றது!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தால்  மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் அனுசரணையுடன்  இரத்த தான முகாமும் சிறப்பு நிகழ்வும் நேற்று (13) பாண்டிருப்பில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கவிதா உதயகுமார், விஷேட அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வைத்தியட்சகர் ஆர். முரளீஸ்வரன், மற்றும் கௌரவ அதிதிகளாக வைத்தியர் என்.ரமேஸ், கிராம அபிவிருத்தி  திணைக்கள அம்பாறை மாவட்ட  அதிகாரி ஏ.வீ.எம். சரீப், பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள்,  மாதர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில்  இரத்த தான முகாம் நடைபெற்றதுடன் கலாசார நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

By admin