கை நழுவுமா கல்குடா?(வேதாந்தி)

கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக தமிழர்களின் இருப்பைத்தக்க வைக்கின்ற முதன்மை மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டமே விளங்குகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற போதிலும் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின் படி காலப்போக்கில் கல்குடாத்தொகுதி தமிழர்களின் கைகளிலிருந்து அதிலும் குறிப்பாக தமிழ் தேசியகூட்டமைப்பின் கைகளிலிருந்து கை நழுவி விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் கட்சிகள் கல்குடாத்தொகுதியில் பிரதேசசபைகளில் தமிழ் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளை உற்று நோக்குவோமாக இருந்தால் தமிழ் தேசியகூட்டமைப்பு 22556,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 22303,அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ் 2057,தமிழர்விடுதலக்கூட்டணி 2572, கருணாஅம்மானின் சுயேட்சை 2997, ஜக்கிய தேசிய கட்சி 6000(அண்ணளவாக),சிறிலங்கா சுதந்திரக்கட்சி 13000(அண்ணளவாக) இதுவே முக்கியகட்சிகள் கல்குடாத்தொகுதியில் தமிழ் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளாகும்.


இந்தவாக்கு வித்தியாசத்தை நோக்குவோமானால் ரி.என்.ஏக்கும் ,ரி.எம்.வி.பீக்கும் இடையிலான வித்தியாசம் அண்ணளவாக 253வாக்குகளே.ஆனால்; வாழைச்சேனைப்பிரதேசத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்படாமல் இருந்துஇருந்தால் பெற்ற வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்தது 700வாக்குகளை இழந்துஇருக்கும்.அந்த அடிப்படையில் பார்த்தால் கல்குடாத்தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளே அதிpகப்படியான வாக்குகளைப்பெற்று கல்குடாத்தொகுதியினை தன்வச மாக்கியிருப்பார்கள்.
நடைபெற்ற தேர்தல் வட்டார முறையில் நடைபெற்று இருந்தாலும் இது ஊருக்கான தேர்தல் என எடுது;துக்கொண்டாலும், குறிப்பிட்ட பிரதேச மக்களின் மனநிலைக்கு ஏற்பவே வாக்களிக்க முற்பட்டுள்ளார்கள்.இத்தேர்தலில் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்துது என்பதை பார்ப்போமானால் பின்வரும் காரணிகள் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தக்கட்சியைநம்பி பலமுறைவாக்களித்தோம் எந்தப்பிரயோசனமும் இல்லை அதனால் வேறு கட்சிக்கு வாக்களிப்போம்,நாம் பரம்பரைபரம்பரையாக இந்தக்கட்சிக்குத்தான் வாக்களித்துப்பழக்கம் அதனால் அவர்களுக்கே வாக்களிப்போம்.தேசியகட்சிகள் வந்தால் வேலைவாய்ப்பு அபிவிருத்தி ஏற்படும் அதனால்; வாக்களிப்போம், இளைஞர்கூட்டமெல்லாம் இவர்களுக்குப்பின்னால் தான் நிற்கின்றார்கள், இளம்தலைமுறையினர் மாற்றம் தேவை என்கின்றார்கள் அதனால் மாற்றத்துக்காக வாக்களிப்போம்,கோயிலில் கூடி முடிவெடுத்துவிட்டார்கள் அதனால் அந்தக்கட்சிக்கே வாக்களிப்போம்.என்னை கட்சி மதிக்கவில்லை எனது பலத்தைக்காட்ட கட்சியினை தோற்கடிப்போம்,இவர்ஊரிய பெரியமனிசன்,வசதிக்காரன் இவருக்கு வாக்களிப்போம், எங்கள் வட்டாரத்தில் வேறு ஊரிலிருந்து வந்து திருமணம் முடித்தவரை நிறுத்தியுள்ளார்கள் இதனால் வேறு ஒருவருக்கு வாக்களிப்போம், நமக்கு அன்பளிப்பு தந்துவிட்டார் இதனால் இவருக்கு வாக்களிப்போம் போன்றவைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்றுஇருந்தன.

மக்களின் மனநிலையில் இவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் ஏன் தமிழ் தேசியகூட்டமைப்பின் வாக்கு வங்கியில் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டியது கட்டாயமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியதலைமைகள் சிலர் கல்குடாத்தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ச.வியாளேந்திரன்,சீ.யோகேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் இளைஞர்அணித்தலைவர் கி.சேயோன் போன்ற முக்கியஸ்தர்கள் கல்குடாத்தொகுதியை மையப்படுத்தியும் ஏன் வாக்கு வங்கியினை தக்க வைக்கமுடியவில்லை என்பதை மட்டக்களப்பு தலைமைகள் ஆராய வேண்டும்.
எனது பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி வீழ்ச்சி அடைந்ததற்கு மாகாணசபையில் நடைபெற்ற கூட்டாட்சியின் விளைவே முக்கியகாரணமாகும்.கல்குடாத்தொகுதி என்பது இருஇனங்களும் வாழும் பிரதேசமாகும். குறிப்பிட்ட தொகுதில் சகோதர இன அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள், காய்நகர்த்தல்கள், அபிவிருத்தியில் பாகுபாடு என்பனவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் கைகட்டி மௌனியாக பார்த்துக்கொண்டிருந்தமை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் வட்டார வேட்பாளர் தெரிவின் போது மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்காமல் தனிப்பட்ட செல்வாக்கியினை பிரயோகித்தமை,கட்சிரீதியாக வட்டாரங்கள் பிரிக்கப்பட்டமை,தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் ஓரம்கட்டப்பட்டமை,ஒதுக்கப்பட்டமை அத்துடன் தழிரசுக்கட்சியின் செயலாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் .இடையில் ஏற்பட்டபனிப்போர், மக்களுடன் நெருங்கிய தொடர்பு இல்லாமை, இளம் வாக்காளர்களை உள்வாங்காமை போன்ற பல்வேறு காரணங்களை கூறலாம்.
ஆனால் நல்லவிடயங்களை செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நல்லவிடயங்கள் செய்வதற்கு பதவி முக்கியம்அல்லை மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். புதவிகிடைத்தால் பணிவு ஏற்படவேண்டும் இந்தப்பணிவுடன் துணிவும்வரவேண்டும்.அப்போதுதான் மக்களுடன் நின்று வேலை செய்யமுடியம்.
நூம் எல்லா மக்களையும் திருப்திபடுத்தமுடியாது ஆனால் நாம் பலவிடயங்களை புதிதாக சிந்திக்கவேண்டும் நமது கண்ணுக்கு முன்னே தெரிகின்ற பிழைகளை,தவறுகளை திருத்த முன்வரவேண்டும்.
நல்ல அபிவிருத்தியும் சமுகஅங்கிகாரமும் தமிழர்களுக்கு கிடைக்க நாம் சகல விடயங்களையும் நேர்மறை எண்ணங்களுடன் மாத்தியோசிக்க வேண்டும். மட்டக்களப்பில் நல்ல சமுகமாற்றம் வரவேண்டும் எனநினைக்கின்ற தலைமைகள் சமுக ஆர்வலர்கள் தூரநோக்கு,இலக்கு என்பவற்றுடன் தங்களை மாற்றிக்கொள்ள முனைவது காலத்தின் தேவையாகும்.

கல்குடாத்தொகுதியில் தேசியகட்சிகளின் வெல்வாக்கு தற்போது மேலோங்கி உள்ளமை எதிர்காலத்தில் எல்லைப்புறங்களில் உள்ள காணிகளுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.இதனை இங்கு பெருவாரியாக நாம் குறிப்பிடவிட்டாலும் தமிழர் பிரதேசங்களில் உள்ள காணிகளுக்கு என்ன நடக்கின்றது என்பதை யாவரும் கண் முன்னெ கண்டுகொண்டு இருக்கின்றோம்.
எனவே மட்டக்களப்பு தமிழ் அரசியல் தலைமைகள் நாம் உண்டு நமக்கு பதவி உண்டு,அந்தஸ்த்து உண்டு,மாதாந்த ஊதியம் உண்டு, உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு அடிமட்டமக்களுடன் இணைந்து வேலைசெய்ய முன்வருவதுடன், தமிழ் தேசியகூட்டமைப்பு கல்குடாத்தொகுதில் புதியவியுகங்களை வகுத்து வேலைத்திட்டங்களை வகுக்காவிட்டால் காலப்போக்கில் கல்குடாத்தொகுதி தமிழ் தேசியகூடட்மைப்பின் கையிலிருந்து மாத்திரமல்லதமிழர்களின் கையிலிருந்தே கைநழுவிவிடும்.

By admin