விவசாயிகளின் முடக்கனாறுப்பாலம் புனரமைக்கப்படுமா? 
(காரைதீவு  நிருபர் சகா)
 
நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக்கிடக்கும் காரைதீவு விவசாயப்பிரதேசத்திற்குட்பட்ட முடக்கனாறுப் பாலம் புனரமைக்கப்படுமா ? என்று அப்பிரதேச விவசாயிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இப்பாலத்தால் தினமும் பலநூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது உள்ளீடுகளை எடுத்துச்செல்வது வழமையாகும்.
அதேபோல அறுவடைக்காலத்தில் விளை நெல்லை வீடுகொண்டுவந்து சேர்ப்பதும் இந்த பாலத்தினூடுதான்.
அப்படிப்பட்ட இப்பாலம் நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக்கிடக்கிறது. அப்பாலத்தின் மத்தியில் ஒரு பொறி உள்ளது. பாரிய குழியொன்று காணப்படுகிறது. வாகனங்களின் ரயர் அதற்குள் இறங்குமாயின் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகும்.அப்படி நடந்துமிருக்கிறது.
நேற்று அப்பாலத்தைமீண்டும் பார்வையிடச்சென்றபோது அப்பிரதேசத்திற்குரிய கமநலசேவை அதிகாரி எம்.சிதம்பரநாதன் வட்டைவிதானை இரா.திருநாவுக்கரசு ஆகியோர் நின்றிருந்தனர்.
இது தொடர்பாக கேட்டபோது இப்பாலம் புனரமைக்கப்பட்டால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பிரயோசனப்படுவதுடன் பலநூறு ஏக்கர் விவசாயநிலமும் வசதிபெறும் என்றார்கள்.

By admin