புதிய உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகள் 20 ஆம் திகதி ஆரம்பமாகிறது!

புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் இந்த மாதம் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது.

இதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானி ஊடாக வெளியாக்கப்பட்டிருந்தது.

இதன்படி இந்த மாதம் 20ம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin