நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தால் டெங்கு ஒழிப்பு சிரமதானம் முன்னெடுப்பு!

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தால்  ”டெங்கை முற்றாக ஒழிப்போம்” டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி இன்று 11 ஞாயிற்றுக்கிழமை நற்பிட்டிமுனை கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழையும் பெய்துவருவதால் நீர் தேங்க நின்று நுளம்புகள் பரவக் கூடிய இடங்களை இனங்கண்டு  குப்பைகளை அகற்றி குப்பைகள் குவிந்து உள்ள இடங்களில் எல்லாம் சிரமதானத்தை மேற்கொண்டனர்.

இதில் கழக உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர் இராஜரெட்ணம், அம்பலத்தடி விநாயகர் ஆலய அறங்காவலர் சபையைச் சேர்ந்த கனகராஜா,  ஆசிரியர் பிறேமகாந் மற்றும் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

 

 

By admin